புதன், 31 ஆகஸ்ட், 2011

மகளிர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் வாலிபர் சாவு

கோவை, விளாங்குறிச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் (39). மார்பிள்ஸ் கம்பெனி அதிபர். கடந்த 27ம் தேதி அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் இவர் அளித்த புகாரில், ‘25ம் தேதி நண்பர் சாமிநாதனுடன் பல்லடம் சென்றேன்.

அங்கு 2 ஆயிரம் சதுர அடி மார்பிள் கல் வேண்டும் எனக்கூறி எங்களை அழைத்த 9 பேர் கும்பல், எங்களை ஒரு வீட்டுக்கு கடத்தி வந்து, என்னிடம் இருந்த அரை பவுன் மோதிரம், செல் போன், ரூ.50,000 ரொக்கம் மற்றும் காரை பறித்து கொண்டது.எனது மனைவிக்கு போன் செய்து, ரூ.25 லட்சம் பணம் கொண்டு வா. இல்லையென்றால் கணவரை கொன்றுவிடுவேன் என கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டினர். பொங்கலூர் மாதப்பூர் அருகில் பணத்தை கொண்டு வந்த மனைவியின் காரில் நான் தப்பினேன்‘ என கூறியிருந்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பல்லடம் எலவந்தியை சேர்ந்த பிரபாகரன், ரமேஷ்(33), கேத் தனூரை சேர்ந்த ஆறுச்சாமி (42), பாலக்காட்டை சேர்ந்த பாலமுருகன்(36), வெள்ளகோவிலை சேர்ந்த ஆனந்தன்(37) ஆகிய 5 பேரை நேற்று அதிகாலை பிடித்து விசாரித்து வந் னர். கேத்தனூரை சேர்ந்த சாமிநாதன், ஈரோட்டை சேர்ந்த தங்கராஜ் ஆகி யோரை தேடி வந்தனர்.
பல்லடம் அனைத்து மகளிர் காவல்நிலையம் அழைத்துவந்து விசாரிக்கப்பட்ட 5 பேரிடமும் நேற்று இரவு 10 மணியளவில் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென ரமேஷ்(33)  பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் இறந்தார். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
கோவை டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி. பாலகிருஷ்ணன், கூடுதல் எஸ்.பி. (மதுவிலக்கு) ஜெயராமன் உள்ளிட்டோர் இன்று அதிகாலை பல்லடம் வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
நேற்று இரவு வாக்குமூலம் பெற்ற மற்றும் விசாரணை நடத்திய போலீசாரிடம் டி.ஐ.ஜி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
திருப்பூர் எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘கைது செய்யப்பட் ட ரமேஷூக்கு திடீரென காக்கா வலிப்பு ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனை கொண்டு செல் லும் வழியில் இறந்தார். இது தொடர்பாக விசார ணை நடந்து வருகிறது‘ என்றார்.
போலீஸ் காவலில் இருந்த வாலிபர் திடீரென இறந்ததால், பல்லடத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் அடித்து துன்புறுத்தியதால், அவர் இறந்திருப்பார் என்று அவரது உறவினர்கள் புகார் கூறி வருகின்றனர்.


இனிவரும் காலத்தில் காவலர்களாக கடமைக்கு செல்லவிருக்கும் நண்பர்களே காவலன் என்பவன் மக்களை காப்பவனே தவிர மக்களை அடிக்க உதைக்க அவனுக்கு அதிகாரமில்லை தன கைப்பிடிக்குள் இருந்து ஒரு திருடன் தப்பமுயலும் போது அவனை மடக்கி அடக்கலாமே தவிர காட்டுமிராண்டிதனமாக இன்னொரு உயிரை வதைத்தல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக