சனி, 20 ஆகஸ்ட், 2011

ஐந்து சீனர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை!

. 2003ம் ஆண்டு சீனர் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக குறித்த ஐந்து சீனர்களுக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் தலைமறைவாக வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமறைவாக வாழும் இருவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக