ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

மேடையை விட்டு இறங்குங்கள்” மாவை.மாட்டேன் சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்வு இன்று நடைபெற்ற போது தாமும் மேடையில் இருக்க வேண்டும் என்று சிலர் அடம்பிடித்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழ்வின் முக்கியஸ்தர்கள் அமர்வதற்கென மேடையில் கதிரைகள் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்தன. கதிரைகள் அடுக்கப்பட்டுக்கொண்டிருந்த போது திடீரென மேடையில் ஏறிய சிவாஜிலிங்கமும், சிற்றம்பலமும் ஒவ்வொரு கதிரைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதேவேளை கதிரைகள் போடுவதற்கு இடம்போதவில்லை என்பதை அவதானித்த மாவை சேனாதிராசா உடனடியாக சிவாஜிலிங்கத்தினைப் பார்த்து நீங்கள் கீழே இறங்கிச் சென்று உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுடன் அமர்ந்து கொள்ளுங்கள் எனக் கோரியிருக்கின்றார்.
இதனை அடுத்து மாவை சேனாதிராசாவைப் பார்த்த சிவாஜிலிங்கம் “நான் ஏன் மேடையை விட்டு இறங்க வேண்டும், நானும் ஒரு காலத்தில் எம்.பி தான் நான் இறங்க மாட்டேன்” என்று அடம்பிடித்துக் கொண்டு கதிரையில் அமர்ந்துவிட்டதாகவும் சிவாஜிலிங்கம் தனது சொல்லுக்கு மதிப்பளிக்கவில்லை என்று மாவை சேனாதிராசா பேராசிரியர் சிற்றம்பலத்திடம் கடிந்து கொண்டதாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழரசுக்கட்சியின் இளநிலை முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
குலநாயகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் நுழைந்த சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வல்வெட்டித் துறை சபையில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக