ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சம்பந்தனின் சவடால் புலன்பெயர்கள் உதவுவார்களாம்? மொல்லைமாரிகளும் முடிச்சவிக்கிகளும்

தமிழ்க் கூட்டமைப்பு வெற்றியீட்டிய உள்ளூராட்சி சபைகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லையாயின் நாம் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து பெறுவோம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டிய உள்ளூராட்சி சபைகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். அரசாங்கம் எமது பிரதிநிதிகள் வெற்றியீட்டிய பகுதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லையாயின் நாம் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து நிதியினைப் பெற்று எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யவுள்ளோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் பதவியேற்பு நிகழ்வு நேற்று நல்லூரியில் நடைபெற்றது.
காலை 10.20 மணிக்கு நல்லூர் இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைவர் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் தமிழ் மக்களுக் குரிய உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையிலான தீர்வுத் திட்டங்களை முன்வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமேயானால் நாம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டிய உள்ளூராட்சி சபைகளுக்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். இப்பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நலன்புரி முகாங்களில் இன்னமும் மீளக்குடியமர அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் மக்களையும் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதியளிக்க வேண்டும். வீதிகளின் அபிவிருத்தி போன்ற ஏனைய சகல அடிப்படை வசதிகளும் தமிழ் பிரதேசங்களில் செய்துகொடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் தமிழ் கூட்டமைப்பினராகிய எமது பிரதிநிதிகள் வெற்றியீட்டிய பகுதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லையாயின் நாம் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து நிதியினைப் பெற்று எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். மேலும் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் நாம் புலம்பெயர் மக்களின் உதவியுடனேயே வெற்றியீட்டினோம். இதற்காக நான் புலம் பெயர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் எமது பகுதிகளில் எமக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
மேலும் தமிழர் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோன்று இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் நிரந்தரமான அபிவிருத்தியாக பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கானதாக அமைய வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களும் சிரேஷ்ட தலைவர்களும் உள்ளூராட்சி சபையில் வெற்றியீட்டி யவர்களும் கட்சி ஆதரவாளர்களுமென பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக