திங்கள், 15 ஆகஸ்ட், 2011

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே எமக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியிருந்தும் அன்று வடக்கு,கிழக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அமைச்சர்களும், அதிகாரிகளும் வடக்கே செல்வதானால் விடுதலைப் புலிகளின் அனுமதி பெறவேண்டும். ரணில் விக்ரமசிங்க விடுதலைப் புலிகள் ஒப்பந்தமே இதற்குக் காரணம். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரணியகலை நூரிபல்லவாகே வீதியை காப்பட் இட்டு புனரமைக்கும் வேலையை நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்துப் பேசும் போது கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்; விடுதலைப்புலிகளை ஒழித்து இன்று வடக்கு, கிழக்கு,தெற்கு இணைக்கப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கிறது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் விடுதலைப் புலிகளின் ஆதரவான வெளிநாட்டவர்களும் எமது நாட்டுக்கு எதிராக இன்று பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். சனல்4 என்பதைக் காண்பித்து வருகின்றனர். இது தவறானது. சனல் 4 என்ற காட்சியை காட்டியவர்கள் இன்று கலவரங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.இந்த நாட்டில் 34 ஆயிரம் கிராமங்களும் 16 ஆயிரம் கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளன. நகர்ப்புற வீதிகள் பாரிய அளவில் புனரமைக்கப்பட்டு வந்தன. மகிந்த சிந்தனைத் திட்டத்தில் இன்று கிராமப்புற வீதிகளும் காப்பட் முறையில் செப்பனிடப்பட்டு வருகின்றன. கேகாலை மாவட்டத்தில் அதிக வீதிகள் காப்பட் முறையில் செப்பனிப்படவுள்ளன. இதற்கு 60 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.தெரணியகலை தொகுதியில் 6 கோடி ரூபா செலவில் வீதிகள் காப்பட் இடப்படவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று தலைமைத்துவப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சஜித் அல்லது கரு எவர் வந்தாலும் மக்களால் நம்பிக்கை வைத்து தெரிவு செய்யப்பட்ட இந்த ஆட்சியை விழுத்த முடியாது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக