வியாழன், 11 ஆகஸ்ட், 2011

தி.மு.க., - பா.ம.க., உரசல் ஆரம்பம்,என்னடா இன்னும் ஆரம்பிக்கவில்லையே

சென்னை: "தி.மு.க.,வின் தோல்விக்கு குடும்ப ஆதிக்கமே காரணம்' என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் விமர்சனத்திற்கு, தி.மு.க., தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. "தேர்தலில் நிற்காத அன்புமணி குடும்ப அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை: "சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியடைவோம் என எதிர்பார்க்கவில்லை. பல துறைகளில் அன்றைய ஆளுங்கட்சி தலைமையின் குடும்ப ஆதிக்கமே இதற்கு ஒரு காரணம்' என்று, அன்புமணி சொல்லியிருக்கிறார். தி.மு.க.,வின் தயவால் மத்தியில் ராஜ்யசபா எம்.பி.,யாகி, அமைச்சராகவும் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால், கடந்த காலத்தை மறந்து விட்டு கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. குடும்ப ஆதிக்கத்தைப் பற்றி அன்புமணி பேசலாமா? அன்புமணி முன்னாள் மத்திய அமைச்சர். ராமதாசின் அக்காள் மருமகன் தங்கராஜ் முன்னாள் எம்.பி., அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி இந்நாள் எம்.பி., அன்புமணியின் தாயார் சரஸ்வதி பெயரில் வன்னியர் சங்க டிரஸ்ட். அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத் முன்னாள் எம்.எல்.ஏ., அன்புமணியின் சித்தப்பா சீனுவாசன் சமீப காலம் வரை பா.ம.க.,வில் தூண். இன்று காங்கிரஸ். அன்புமணிக்கு கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். அ.தி.மு.க.,வுடன் சேர்ந்து லோக்சபா தேர்தலில் ஏழு இடங்களில் நின்றீர்களே, எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப் பார்த்து பேசுங்கள். இனி வருங்காலமும் அதேபோல்தான். மல்லாந்து படுத்துக் கொண்டு காரி உமிழ்ந்தால் தன் மார்பில் தான் விழும் என்ற பழமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன். பா.ம.க.,வில் பலர் காலி செய்து விட்டு சென்றதே தங்களால் தான் என பேசிக் கொள்வதை சிந்தித்து அரசியல் செய்யுங்கள். தேர்தலிலேயே நிற்காத அன்புமணி, இனிமேலாவது குடும்ப அரசியல் என்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறிய பின் தி.மு.க.,வை பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் செய்த விமர்சனம் தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அன்புமணியை விமர்சித்து பொன்முடிவெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து, தி.மு.க., - பா.ம.க., இடையே மோதலை உருவாக்கியுள்ளது.
Raja Mohamed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
ஏனுங்க// பொன்முடி// சாக்கடையில் கல் விட்டால் அது நம்ம மேல் தான் படும்// இவனுங்க அரை கிறுக்கனுங்க// இவனுங்களுக்கு போய் பதில் சொல்லிக்கிட்டு/// போங்க போங்க சார்/
Baskaran Subramanian - chennai,இந்தியா
அடிச்சிகாதீங்கப்பா!! நீங்க சண்ட போடுறத பாத்தா தெருவுல ஏதோ சண்ட போட்டுக்குமே அது தான் நியாபகம் வருது!!!!
Baskaran Subramanian - chennai,இந்தியா
உங்க தலைவரு அன்னிக்கி என்ன சொன்னாரு ??? நானும் ராமதாசும் husband , wife மாதிரின்னு சொன்னாரே!!! அட புருஷம் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் பிரச்சின வரத்தான் செய்யும் அதுக்கு இந்த ஆளு ஏன் கூவுறாரு??? ராமதாசோட சக்களத்தியா இந்த பொன் முடி ?? அப்போ மு.க வுக்கு என்ன வேணும் இவரு???
vennai govindan - nochikuppam,யூ.எஸ்.ஏ
அன்புமணி அண்ணே பொன்முடியும் அவர் குடும்பமும் விழுப்புரம் முழவதும் அட்டய போட்ட அணைத்து சொத்துகளின் விபரத்தை எடுத்து விடவும். இல்லையென்றால் இவர் மீது ஒரு நில அபகரிப்பு புகார் உடனடியாக குடுக்கவும். இவரை உள்ள தள்ள இது செரியான வாய்ப்பு. விடாதீங்க.
vadivelu - chennai,இந்தியா
ஆஹா!! இப்போ அன்புமணி உங்க முறை . பொன்முடி பத்தி எடுத்து விடுங்க. எப்படியும் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்.சரியான போட்டி.யார் வெல்கிரீகள் என்று பார்ப்போம்
gnanavel - chennai,இந்தியா
எதுக்கு கிருஷ்ணசமிய இழுகிரிங்க அவர் காங்கரஸ் ... அவர் ஏன் எம்.பினு காங்கரஸ் கிட்ட கேளுங்கடா..

Sundar - Bangalore,இந்தியா
எதிர்ப்பார்த்த ஒன்று தான் ... என்னடா இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்று பார்த்தேன்.. சபாஷ்.. நீங்கள் இரு கட்சிகளும் அரசியலில் இருக்க தகுதி இல்லாதவர்கள் .. அடித்துக்கொண்டு சாகுங்கள் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக