சனி, 20 ஆகஸ்ட், 2011

ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


jeyalalitha-rajivஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்படும். இந்த ஆண்டு ராஜீவ்காந்தி பிறந்த நாள் இன்று (ஆகஸ்டு 20) வருவதால், நேற்றே தலைமை செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப் படம் மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு, ராஜீவ்காந்தி உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தலைமை செயலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி சட்டசபை நிகழ்ச்சிகள் 1/2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக