செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இதோப்பாரடா நம்ம கூட்டமைப்புக்காரன்க வெளியூராட்ச்சி தேர்தலிலும் அவங்களுக்குதான்

இது தெரிந்தது
அப்பாடா ஒருமாதிரி உள்ளுராட்சி தேர்தலும் முடிஞ்சாச்சு, மக்களும் வழமை போல தங்கள் வரலாற்று சாதனையை செய்து முடித்திருக்கிறார்கள், அவர்கள் இம்முறை இதை தெரிஞ்சு செய்தார்களோ, தெரியாமல் செய்தார்களோ அவர்களுக்கு  என்பதே இன்றைய காலகட்டத்தின் எதார்த்தம்.
. பல சகாப்தங்களாக இனவாத அரசியலை நடத்திக்கொண்டிருக்கும் தமிழர் கூட்டணியின் அரசியலில் ஊறிப்போன மக்கள் அவர்களை மீண்டும் அமோக வெற்றியுடன் தேர்ந்தெடுத்ததில் பெரிய ஆச்சரியமும் படவும் முடியாது. மொத்தத்தில்  நடந்த போட்டியில் ஏதோ ஒன்று ஜெயிச்சிருக்கிது அம்முட்டுதான்.        
இனியென்ன அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் மகிந்தாவை பார்த்து, மகிந்தா சார்! ப்பிளீஸ் இந்த தமிழ் மக்களுக்கு ஒன்றிரண்டு இறைக்கைகளாவது போடேன் அப்பத்தான் அடுத்த எலக்ஷனிலலாவது நாம ஜெயிக்கலாம் என்று முடிச்சவிக்கள் கெஞ்சிக்கொண்டிருக்க, இதோ பார் மகிந்தா! மரியாதையா நாங்க கேட்ட எல்லா இறைக்கைகளையும் தந்திடணும் இல்லாவிட்டி அவ்வளவுதான் நடக்கிறதே வேற என்று மொல்லைமாரிகள் மிரட்டிறது போல காலத்தை கடத்தி கொண்டிருப்பார்கள். இதைப்பாத்து இன்பபுற்ற எம்மக்களும் இதோப்பாரடா நம்ம கூட்டமைப்புக்காரன்க மகிந்தாவை என்னவா மிரட்டுறாங்க, அடுத்த எலக்ஷனிலும.;.. ஆமா இப்போ நடந்து முடிஞ்ச எலக்ஷன் என்னது உள்ளுராட்சியா? அப்போ வெளியூராட்ச்சி தேர்தலிலும் அவங்களுக்குதான் எங்க ஓட்டு. பின்ன அறுபது வருஷ பிரச்சனை அஞ்சே நிமிஷத்தில தீர்ந்து போகாத என்ன.
இது தெரியாதது போன்றது
சமீபத்தில் ஒரு அறிக்கை, வழமை போல சம்பந்தர் ஐயாவுடையது தான், சொல்கிறார் டக்ளஷம், சங்கரி ஐயா மற்றும் சித்தார்தன் போன்று மனம்மாறி தங்களுடன் இணைந்து உண்மையை பேசத்தொடங்கணுமாம், அதற்கு சங்கரி ஐயாவும் விழுந்தடிச்சு எதிர் அறிக்கை விட்டிருக்கிறார் அதாவது இந்த அறிக்கை தனக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணி விட்டதாம், ஐயோ ஐயோ.. சங்கரி ஐயா! சம்பந்தர் ஐயாவின் அறிக்கையை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டதாக சொல்வதுதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பின்ன என்னவாம் நீங்கள் போய் சேர்ந்த இடம் என்ன கம்பர் வீடா கவி பாட, கண்றாவி அத்தோட அதைத்தான் தின்னமுடியும். பழம் பெரும் அரசியல்வாதி நீங்களெல்லாம் இப்படி காமெடி பண்ணக்கூடாது. எதையாவது இழந்தால்தான் எதையாவது பெறமுடியும் விட்டு தள்ளுங்கையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக