புதன், 17 ஆகஸ்ட், 2011

போட்டி என்பது விஜய்க்கும், சூர்யாவுக்கும் இடையேதான்.

கோலிவுட்டின் இப்போதைய சூப்பர் ஹீரோ யார்?
"வித்தியாசமான நடிப்பைத் தருவதோடு, வசூலையும் அள்ளித் தருகிற ஹீரோ சூர்யாதான். 


விஜய்க்கு பி அண்ட் சி சென்டரில் செல்வாக்கு! அஜீத்திற்கு ஏ அண்ட் பி சென்டரில் செல்வாக்கு! ஆனால் சூர்யாவுக்கோ ஏ, பி அண்ட் சி சென்டர்... என ஆல் சென்டரிலும் செல்வாக்கு'’ என்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும். சூர்யாவின் "சிங்கம்'’ பட வசூல் ரஜினியின் "சிவாஜி'’பட வசூலை எட்டியதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். கதைத் தேர்விலும், இயக்குநர் தேர்விலும் ரொம்ப மெனக்கிடும் சூர்யா அதற்காக கடுமை யாக உழைப்பதால் இந்த ‘நாற்காலி’ அவருக்கு வசப் பட்டிருக்கிறது!

சூர்யாவின் இந்த விஸ்வரூபம் விஜய்க்கு பக்குவ மாக எடுத்துச் சொல்லப் பட... விஜய்-அஜீத் போட்டி என்பது திசைமாறி விஜய்- சூர்யா என உருவெடுத் திருப்பதுதான் கோலிவுட் டின் லேட்டஸ்ட் பரபரப்பு!
விஜய் படம் நல்ல எண்டர்டெயின்மெண்ட்டாக இருந்தாலும் ஒரே பாணியில் நடித்து வருவதால் அவரின் ரசிகர் களுக்கே கொஞ்சம் சலிப்பு ஏற்பட் டது. போட்டியாளர்களாக கருதப்பட்ட விஜய்யும், அஜீத்தும் சமீபகாலமாக அடிக்கடி சந்தித்து நட்பு வளர்த்து வருகிறார்கள். அப்படிப் பட்ட ஒரு சந்திப்பாக ‘"மங்காத்தா'’ படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் விசிட் அடித்தார். அப்போது... "எங்க டைரக்டர் வெங்கட்பிரபு கூட ஒரு படம் பண்ணுங்க பிரதர். ஒரு சேஞ்ச் தெரியும்'’ என நட்பு ரீதியாக ஆலோசனை சொன்னார் அஜீத்.

சமீபத்தில் ‘"தெய்வத் திருமகள்'’ படத்தின் புரமோஷனுக்காக மீடியாவை சந்தித்த அனுஷ்கா ‘""விஜய் ரொம்பத் திறமையானவர். ஆனால் அவரோட திறமைகள் இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை''’ என கருத்து தெரிவித்திருந்தார்.

‘"ப்ரெண்ட்ஸ்',’"‘சச்சின்', "காவலன்'’ என அவ் வப்போது மாறுதலான படங்களில் விஜய் நடித் தாலும் கூட... ஒரு ஆக்ஷன் படம், ஒரு மாறுதலான படம் என மாறிமாறி விஜய் செய்ய வேண்டும் என்கிற விருப்பம் எல்லோருக்குமே உண்டு.
"த்ரீ இடியட்ஸ்'’ இந்திப் படத்தை தமிழில் "நண்பன்'’ என எடுக்க திட்டமிட்டதுமே டைரக்டர் ஷங்கரின் சாய்ஸ் சூர்யாதான். ஆனால் சம்பள விஷயத்தில் உடன்பாடு எட்டப்படாததால் விஜய்யிடம் பேசி னார் ஷங்கர். விஜய்யும் படப்பிடிப் பிற்கு தயாரான நேரத்தில் சில கார ணங்களால் விஜய்யை நடிக்கவைக்க முடியவில்லை ஷங்கரால். ஷூட்டிங் ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு... மறுபடி சூர்யாவிடமே பேசினார் ஷங்கர். ஆனால் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஞானவேல் ராஜாவை தயாரிப்பில் ஒரு பார்ட்னராக்க வேண் டும்... அல்லது தெலுங்கு பதிப்பிற்கு அவரை புரொடியூஸராக்க வேண்டும்.... என்கிற மாதிரி கெடுபிடிகள் போட்டார் சூர்யா. ‘அது சரிப் பட்டு வராததால்’ திரும்பவும் விஜய்யை வைத்தே ‘"நண்பன்'’ படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர். வழக்கமான விஜய் படங்களிலிருந்து.. இது மாறுதலான படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இது விஜய் படம், ஷங்கர் படம் என்கிற இரண்டு அடையாளங்களோடு இருப்பதால் இருதரப்பு ரசிகர்களின் படம் என்கிற புதிய அடையாளம் கிடைத்திருக் கிறது. இதைத் தான்.... அதாவது அஜீத் சொன் னது போல், அனுஷ்கா சொன்னது போல்... ஷங்கரும் ‘"நண்பன்'’ படப்பிடிப்பின் ஓய்வு வேளைகளின் போது விஜய்யிடம் ஆலோசனையாகச் சொன்னார்.
"கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி... இப்படி சில இயக்குநர்களின் படங்களுக்கென்று தனியாக ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை சூர்யா சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். அதேபோல நீங்களும் தனி அடையாளம் உள்ள இயக்குநர்களின் படங்களில் அவர்களின் ஸ்டைலுக்கேற்ப உங்கள் ஸ்டைலையும் கலந்து படம் பண்ணுங்க. வழக்கமான ஆக்ஷன் என்பது ஒரு கட் டத்தில் போரடித்து விடும்' என விஜய்க்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறார் ஷங்கர். அதில் இருந்த நியாயமான விஷயங்களைப் புரிந்து கொண்ட விஜய், தனது போக்கில் பெரிய மாற்றத் தை ஏற்படுத்தினார்.
எளிதில் சந்திக்க முடியாதவராக இருந்த விஜய் இப்போது பெரிய டைரக்டர்களை அழைத்துப் பேசிவருகிறார். அதன்படி ஏற்பட்டதுதான் விஜய்-கௌதம்மேனன் இணையும் ‘"யோஹன்'’ படம். சீமான் இயக்கத்தில் "பகலவன்' படத்தில் டாக்டராக இருந்து போலீஸ் அதிகாரியாக மாறும் வித்தியாசமான கதையில் நடிக்கிறார் விஜய். இதேபோல ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஹரி படம் ஒன்றிலும் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஏ.ஆர்.முருகதாஸும் சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்.

சூர்யாவின் ஃபேவரைட் டைரக்டர்களான கௌதம்மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி ஆகியோருடன் விஜய் கூட்டணி வைக்கவிருப்பதால் நிச்சயம் ஒரு மாறுதலான விஜய்யை பார்க்க முடியும்.
ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட அஜீத்... ‘"என் படம் நல்லா இருந்தா மக்கள் பார்ப்பாங்க'’என போட்டிக் களத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறார். ஆக... இனி போட்டி என்பது விஜய்க்கும், சூர்யாவுக்கும் இடையேதான்.

இந்த ஆரோக்கியமான போட்டி... மாறுதலான படங்களா மாறி ரசிகர்களை சந்தோஷப்படுத்தட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக