செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு இன்னும் சில மணி நேரங்களில் வந்துவிடும்


தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடந்த 28.07.2011 அன்று தொடங்கி 6 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை 04.08.2011 அன்றுடன் முடிவடைந்தது.

தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அத்துடன், 10.08.2011க்குள் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட் இன்று (09.08.2011) இறுதி தீர்ப்பு வழங்குகிறது. காலை 10.30 மணிக்கு இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா, சவுகான் பெஞ்ச் தீர்ப்பு வழங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக