புதன், 17 ஆகஸ்ட், 2011

ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கவுள்ள ஆனையிறவு உப்பளம்

வடபகுதியிலுள்ள மக்களுக்குத் தொழில் வாய்ப்பை வழங்கும் நோக்கில் ஆனையிறவு உப்பளத்தை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு பொறுப்பேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடபகுதியிலுள்ள இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கண்ணிவெடிகள் பெருமளவில் புதைக்கப்பட்ட நிலையில் அபாயகரமான பிரதேசமாகக் இப்பிரதேசம் செயலிழந்து காணப்பட்டது.
மீண்டும் இந்த உப்பளத்தை அபிவிருத்தி செய்து உப்பு உற்பத்தியை ஆரம்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த உற்பத்தி நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
1800 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த உற்பத்தி நிலையத்தை புனரமைப்புச் செய்து இயங்கவைப்பதன் மூலம் நாட்டின் உப்பு உற்பத்தித் தேவையை பூர்த்தி செய்வதுடன் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொழில் வாய்ப்பையும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக