செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தர்மபுரி.புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்!

தர்மபுரி: இறந்ததாக கருகி, இறுதி சடங்குகள் முடித்து, குழியில் இறக்கிய போது, இறந்தவர் உடலில் அசைவு ஏற்பட்டு உயிரோடு இருப்பது தெரிந்ததால், தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், நெருப்பூர் அடுத்த குருக்கலையனூர் பகுதியை சேர்ந்தவர் மாது(33). ஆந்திர மாநிலத்தில் உள்ள கொட்டாளம் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அங்கு பணியின் போது, தவறிவிழுந்த மாது, படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, டாக்டர்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மாது இறந்தது குறித்து, தர்மபுரியில் உள்ள குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பி்ன்னர், ஊருக்கு கொண்டு வரப்பட்ட மாதுவின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு புதைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.

உறவினர் உடலை குழியில் வைத்து, மண்ணை போட ஆரம்பித்தபோது, இறந்ததாக கூறப்பட்ட மாதுவின் உடல் அசைந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக மாதுவை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாதுவின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு உயிர் இருப்பதை உறுதி செய்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இறுதி சடங்குகளை முடித்து, சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வரை அசைவற்று கிடந்த உடல், புதைக்க மண் போடப்பட்ட போது மீண்டும் உயிர் பெற்றது, அப்பகுதியில் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
  
 Dharmapuri, a dead man's body shaked while relatives putting mud to close the pit. Madhu 'died' while working in Andra. The relatives received the body. After performing last rigts the relative placed the died body in pit, and while putting mud over the body, they realize a shake in dead body. Then Madhu admitted in a government hospital for treatment. Doctor conformed that he is still alive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக