புதன், 3 ஆகஸ்ட், 2011

ஜப்பானிலே ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்காவிலே மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாக

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசை விட ஹிலாரி க்ளிண்டன் தான் எனக்கு முழு ஆதரவு அளித்துள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார் ஜெ.
‘ஜப்பானிலே ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்காவிலே மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாக’ ரேஞ்சில் இந்த டயலாக் சொல்லப்பட்டிருக்காது என்று நம்புவோமாக.
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க புரட்சித் தலைவி ஹிலாரி போட்டியிட்டால், முதல் ஆதரவுக் குரல் நம்மூரிலிருந்து தான் எழும் என்று எதிர்பார்க்கலாம்! இங்கே தான் அவருடைய உடன்பிறவாச் சகோதரி இருக்கிறாரே! அமெரிக்க அரசியலில் நம்மூர் அம்மா போட்டியிடும் காலம் வரும் என்று எந்த மலையாள ஜோசியக்காரராவது சோழி உருட்டிக் கொண்டு சொல்லிக்கொண்டு வராத வரைக்கும் சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக