செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

புலிகளுக்கான புனர்வாழ்வுக்கு 2.5 பில்லியன் ரூபா செலவு!

புனர்வாழ்வு ஆணையாளர் தகவல்
முன்னாள் புலி உறுப்பினர்ககளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக 2009ம் ஆண்டு மே மாதம் முதல் சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2009 மே மாதம் முதல் 2010 மே மாதம் வரையிலான முதலாம் ஆண்டில் 1.8 பில்லியன் ரூபா புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு செலவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 8000 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் 100 பெண்கள் உட்பட இன்னும் 2000 ஆயிரம் பேர் புனர்வாழ்வுப் பயிற்சிகளில் ஈடுபட்டடுவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
யுத்த வலய மீள்குடியேற்ற நடவடிக்கைளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை பயன்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக