பெல்லாரி: கர்நாடக மாநிலம், ஒசப்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு இரண்டே நாளில் 20 லட்சம் கட்டணம் செலுத்தும் அளவுக்கு செல்போனில் பேசிய மர்ம நபர்கள் தீவிரவாதிகளாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில், பிரசாந்த், அவரது மனைவி ஜோதி பிரசாந்த் மற்றும் ரூபேஷ் ஆனந்த்நாயர் என்ற 3 பேர் போஸ்ட் பெயிட் சிம் பெற விண்ணப்பித்தனர். பான்கார்டு, பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்து அவர்கள் இணைப்பு பெற்றனர். இவர்களில், பிரசாந்த், ஜோதி பிரசாந்த் இருவருக்கும் தலா 2 சிம்களும், ரூபேஷ் ஆனந்த் நாயருக்கு ஒரு சிம் இணைப்பும் பெறப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த ஜூலை மாதம் 17, 18 தேதிகளில் மலேசியா, ஹாங்காங் மற்றும் மாலத்தீவு ஆகிய வெளிநாடுகளுக்கு கான்பரன்சிங் கால் மூலம் பேசியுள்ளனர். இதற்கான பில் தொகை ஸி20 லட்சமாகும். இந்த பில்லை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கண்ட 5 பேர் கொடுத்த முகவரிக்கு அனுப்பிய போது அந்த முகவரியில் யாரும் இல்லாதது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கொடுத்த ஆவணங்கள் யாவும் போலியானது என்பதும் தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தார், இதன் மூலம் தீவிரவாத அமைப்புகள் ஏதாவது சதித் திட்டம் தீட் டுகின்றனவா என்ற சந்தேகத்தில், ஒசப்பேட்டை போலீசில் இம்மாதம் 8ம் தேதி புகார் அளித்தனர். புகாரை ஏற்ற மாவட்ட கூடுதல் எஸ்பி கியாதன், கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011
2 நாளில் 20 லட்சம் பில்:செல்போனில் வெளிநாடுகளுக்கு பேசிய மர்மநபர்கள் யார்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக