திங்கள், 15 ஆகஸ்ட், 2011

1 லட்சம் லாரிகள் ஓடவில்லை,வெளி மாநிலங்களுக்கு செல்லும்

சேலம்: வரும் 18ம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சரக்கு புக்கிங் நிறுத்தப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஒரு லட்சம் லாரிகள் நேற்று முதல் ஓடவில்லை. இதனால் பல ஆயிரம் கோடி மதிப் புள்ள சரக்குகள் தேக்கமடைய ஆரம்பித்துள்ளன.
மத்திய கப்பல் மற்றும் தரை வழி போக்குவரத்துத்துறை செயலர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவருடன் 2010 டிசம்பர் மாத லாரி வேலைநிறுத்தத்தின்  போது செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக்கோரியும் வரும்  18ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை மற்றும் மகாராஷ்டிராவில் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் லாரி உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர். சரக்கு புக்கிங் நிறுத்தம் குறித்து நாமக்கல் தாலுகா சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்க பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியது:
வேலைநிறுத்தம் தொடங்கும் நேரத்தில் வெளி மாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றி செல்ல லாரி ஓட்டுனர்கள் தயாராக இல்லை. இதனால், நேற்று முதல் வெளி மாநிலங்களுக்கு சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழகத்துக்குள் மட்டும் புக்கிங் செய்யப்படும். அதுவும் 17ம் தேதி நிறுத்தப்பட்டு விடும். தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சரக்கு புக்கிங் ஏஜென்ட் அலுவலகங்களிலும் புக்கிங் நிறுத்தப்பட்டு விட்டது.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில், ‘‘வேலைநிறுத்தம் 18ம் தேதி நள்ளிரவு முதல் திட்டமிட்டப்படி நடைபெறும். வெளிமாநிலங்கள் செல்லும் அனைத்து லாரிகளும் வரும் 16ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக