ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (10)

மூன்று ‘கப்’ தண்ணீரில் முகம் கழுவினேன்!
LTTE torture chamberநான் உள்ளே சென்ற நேரம், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 75 பேர் வரையிலான கைதிகள், காலைக் கடன்களைக் கழிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு நின்றனா. சுமார் ஒரு முழம் அளவு உயரம் மட்டுமே சுவர் மறைப்பு செய்யப்பட்டிருந்த மல சல கூடத்தில், ஒருவர் பலர் முன்னிலையில் மலம் கழித்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் தமக்கு கிடைக்கும் ஒன்று அல்லது இரண்டு தேநீர் குவளைகள் அளவிலான தண்ணீரில், பல் விளக்காமல் (பல் விளக்குவதற்குத் தேவையான எதுவும் அங்கு இல்லை) முகத்தை மட்டும்; ‘கழுவிக்’ கொண்டிருந்தனர். நான் அன்று அங்கு ‘விசேட அதிதியாக’ அனுப்பப்பட்டிருந்த படியினால், எனக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் மூன்று ‘கப்’ தண்ணீர் ‘தாராள மனதுடன்’ வழங்கப்பட்டது. அருகில் ஒருவர் மலம் கழித்துக் கொண்டிருக்க, பலர் நிரையில் காத்திருக்க, அவசரம் அவசரமாக நான் அந்தத் தண்ணீரால் முகத்தை பெயருக்கு கழுவிக் கொண்டேன். துடைப்பதற்கு துவாய் எதுவுமில்லை. அங்கிருந்தவர்கள் எப்படித் துடைத்துக் கொள்கிறாhகள் என்று பார்த்த போது, அவர்களும் துவாய் எதுவுமில்லாமல் தாம் கட்டியிருந்த சாரங்களினால் முகத்தைத் துடைத்துக் கொண்டதை அவதானித்தேன். ஓ எனக்கு இது ஒரு புது அனுபவம், ஆனால் அங்கிருந்தவர்களுக்கு இது எல்லாம் பழகிவிட்டது போலும்! ‘தமிழன் இல்லாத நாடில்லை, ஆனால் தமிழனுக்கென்றோர் நாடில்லை’ என்றும், ‘ஆண்ட தமிழினம் மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன?’ என்றும், தர்க்க ரீதியாகவும், வீராவேசமாகவும், உணர்ச்சி வெளிப்பாட்டுடனும், ‘வீரபாண்டிய கட்டப் பொம்மன்’ படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவது போலப் பேசி, ‘தமிழீழ தனியரசு’ அமைக்கப் புறப்பட்ட எமது ‘மறத்தமிழர்களின்’ சிறைக்கூடம், இப்படி சகிக்க முடியாமல் நாற்றமெடுப்பதை, எந்த செங்கோல் மன்னனிடம், எந்த ஆராய்ச்சி மணியை அடித்து முறையிடுவது என எனது மண்டையைப் பிய்த்துக் கொண்டேன். (மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக