வியாழன், 25 ஆகஸ்ட், 2011

100 ஆண்டுகளில் அதிகம் அமெரிக்காவில் பூகம்பம் கட்டிடங்கள் இடிந்தன!


வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.8 ஆக பதிவானது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்தன. பலவற்றில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவில் கடந்த செவ்வாய் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் வாஷிங்டனிலிருந்து 139 கி.மீ. தொலைவில் உள்ள வர்ஜினியா மாகாணம் ரிச்மண்ட் என்ற இடத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டரில் இது 5.8 ஆக பதிவானது.

கடந்த 1897ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு (5.9) அதிக அளவிலான நிலநடுக்கம் இதுதான். இதனால் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நியூயார்க் நகரில் உள் 2 அணு மின் நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டன. £ஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்க ராணுவ தலையகமான பென்டகன், வெள்ளை மாளிகை, இந்து கோயில்கள் உட்பட பல முக்கிய கட்டிடங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக