வியாழன், 21 ஜூலை, 2011

White field சாய்பாபாவின் ஒயிட் பீல்டு ஆசிரமத்தில் ரூ.5 கோடி நகைகள் மீட்பு

பெங்களூர் ஒயிட் பீல்ட் பகுதியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்திலும் ஸி5 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், பணம் நேற்று மீட்கப்பட்டன.
புட்டபர்த்தி சாய்பாபா இறந்த பிறகு, பிரசாந்தி ஆசிரமத்தில் அவர் தங்கியிருந்த யஜுர் மந்திரில் சோதனை நடத்தப்பட்டதில், நேற்று முன்தினம் வரை ரூ.59 கோடி மதிப்புள்ள ஆபரணங்கள், பணம் கிடைத்துள்ளன. இந்த நிலையில், சாய்பாபா மற்ற இடங்களில் தங்கும் ஆசிரமங்களிலும் நகை, பணக் குவியல்கள் உள்ளன.

பெங்களூர் அருகே உள்ள ஒயிட் பீல்ட் பகுதியில் சாய்பாபாவின் ஆசிரமம் உள்ளது. இதற்கு, பிருந்தாவனம் என்று பெயர். இங்கு மருத்துவமனையும் உள்ளது.
இந்த ஆசிரமத்தில் பாபா தங்கும் அறையில்  கர்நாடக, ஆந்திர போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மாவட்ட கலெக்டர் ஐயப்பன், துணை போலீஸ் கமிஷனர் ஹர்ஷா, தாசில்தார் சிவக்குமார், சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் ரத்னாகர், வினய்குமார் ஆகியோர் முன்னிலையில் சோதனை நடந்தது.

அங்கு 6.09 கிலோ தங்கம், 245.36 கிலோ வெள்ளி, விலை உயர்ந்த கற்கள் மற்றும் ரூ.80 லட்சம் பணம் கிடைத்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி.
பிருந்தாவனம் ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சில அறைகளையும் திறந்து சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை. 7 மணி நேர  சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சூட்கேஸ், பெரிய பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அவற்றை காடுகோடியில் உள்ள கனரா வங்கி லாக்கரில் அதிகாரிகள் வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக