ஞாயிறு, 24 ஜூலை, 2011

UPFA வடக்கின் திடகாத்திரமான அரசியல் சக்தியாக பரிணாமம் பெற்று

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதோ  வெற்றி பெற்றுவிட்டது போல் தோற்றமளிக்கிறது.ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல.மிக மோசமான உடகங்கள்,  புலன்பெயர் மற்றும் தமிழ் நாட்டு கேடி அரசியல்வாதிகளின் வெற்றுக்கோஷம் போன்றவற்றின் துணையுடன் பெற்ற இந்த வெற்றி மிகவும் தற்காலிகமானது. இனவாத உணர்ச்சியை கிளறி விட்டு எரியும் நெருப்பில் குளிர் காயும் இந்த கேவலத்தைதானே கடந்த அம்பது ஆண்டுகளாக தமிழ் அரசியல் வாதிகள் செய்துவருகின்றனர்.
தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி, புலி இயக்கம் இன்று இவற்றின் எச்சங்களான தமிழ் தேசிய கூட்டமைப்பு இவையெல்லாமே தமிழினத்தின் சாபக்கேடுகளாகும்.
நடந்து முடிந்த உள்ளூர் ஆட்சி தேர்தல் முடிவுகள் உண்மையில் சற்று நம்பிக்கை அளிப்பவையாகத்தான் இருக்கின்றன.
ஒரு தேசிய கட்சிக்கு அதாவது பல்லின மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அணிக்கு தமிழ் மக்கள் அளித்திருக்கும் வாகுகள் மிகவும் நம்பிக்கை அளிப்பவையாகும்.வடக்கின் சகல உள்ளூர் ஆட்சி மன்றங்களிலும் ஜனநாயக மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மிக கணிசமான வாக்குகள பெற்று வடக்கின் திடகாத்திரமான அரசியல் சக்தியாக பரிணாமம் பெற்று இருப்பது யாராலும் மறுக்க முடியாது. இனியும் கண்ணை இருக்க மூடிக்கொண்டு இருந்தால் காலம் சொல்லித்தரும் பாடங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக