புதன், 6 ஜூலை, 2011

Padmanabha swamy கணக்கெடுப்பை வீடியோ எடுக்க உத்தரவு

புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் பாதாள அறைகளில் இருக்கும் நகைகள் கணக்கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் பாதாள அறைகளில் இருக்கும் நகைகளை கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதை வீடியோ மூலம் பதிவு செய்யவும், நகை மற்றும் அரிய பொருட்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கவும் கோரி, சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தற்போது நடந்து வரும் நகை கணக்கெடுக்கும் பணிகளை வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நகைகளின் உண்மையான மதிப்பை கண்டறியவும், அவற்றை பாதுகாக்கவும் தொல்பொருள் வல்லுநர் குழு ஒன்று அமைக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தொல்பொருள்துறை அதிகாரிகளின் பெயரை மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நகைகளை திருவனந்தபுரம் அரசு மியூசியத்தில் வைத்து பாதுகாக்கும் திட்டம் உள்ளதால், அதன் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக