வெள்ளி, 15 ஜூலை, 2011

Jaffna யுவதியை கத்தியால் குத்தி, தீயிட்டு கொளுத்திய இளைஞன்!

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு முன்னால் யுவதி ஒருவரை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி தீ மூட்டி கொலுத்தியுள்ளார். பாடசாலையில் கல்வி கற்கும் உறவினரின் பிள்ளையை அழைத்து வருவதற்காக இன்று பிற்பகல் 2.10 மணியளவில் பாடசாலைக்கு குறித்த யுவதி சென்றுள்ளார்.

இதன் போது அங்கு வந்த இளைஞன் அருகில் இருந்த கடையில் உள்ள கத்தியை எடுத்து யுவதியின் வயிற்றில் குத்தியுள்ளதோடு கழுத்தையும் அறுத்துள்ளார்.
இதனையடுத்து நிலத்தில் வீழ்ந்த யுவதியை தான் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தி தானும் அந்த உடல் மீது வீழ்ந்து எரிந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 28 வயதுடைய அகிலா என்ற குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், பெண்ணின் காதலான மற்றைய நபருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் இறுதியில் அந்தப் பெண் கத்தியால் வெட்டப்பட்டே எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 
அவர்களில் மிகமோசமாக எரிந்த நிலையில் காணப்பட்ட பெண் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக