புதன், 13 ஜூலை, 2011

தமிழகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு-உஷார் நிலை,குண்டுவெடிப்பைத் தொடர்ந்து

மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் வருகையையொட்டி அங்கு ரசிகர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி விமான நிலைய வளாகத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்காமல் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டருடன் படம் பார்க்க வருபவர்களை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை நகரின் எல்லைப்புறச் சாலைகளில் தீவிர வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள்ளும் வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நகரங்கலிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக