திங்கள், 11 ஜூலை, 2011

எந்த அளவு என்னை இழிவு படுத்தினார்கள்: ஊடகங்கள் பற்றி கலைஞர் கருத்துக்கு விஜயகாந்த் பதில்

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், தனியார் டி.வி.யில் நேயர்கள் இ மெயில் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நேயர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு விஜயகாந்த் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:; ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிடலாம் என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளாரே?
பதில்: அப்படியானால் இவருடைய பேரன் டி.வி.யும், அவரது டி.வி.யும் எந்த அளவு என்னை இழிவு படுத்தினார்கள் என்பதை அவர் வாயாலே சொல்லுகிறார். அன்று ஆட்சியில் இருந்ததால் வருத்தம் தெரியவில்லை. இன்று வருத்தம் தெரிகிறது. இப்படித்தானே ஒவ்வொருத்தருக்கும் வருத்தம் இருக்கும். இந்த வருத்தத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக