சனி, 16 ஜூலை, 2011

வக்கீல்கள் எதிர்ப்பு... உயர்நீதி மன்ற விழாவுக்கு வராமல் தவிர்த்த ஜெயலலிதா

சென்னை: வக்கீல்கள் எதிர்ப்பு காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்தார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமையவுள்ள மாற்றுமுறை சமரச தீர்வு மையத்துகான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முன்வைத்து, உயர் நீதிமன்ற விழாவில் அவர் பங்கேற்கக் கூடாது என திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, பதிலுக்கு அதிமுக வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அடிக்கல் நாட்டு விழாவுக்கு வராமல் விட்டுவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் செந்தமிழன் கலந்துகொண்டு பேசினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக