வியாழன், 7 ஜூலை, 2011

தயாநிதி மாறனுக்குப் பதில் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி?

டெல்லி: ஜவுளித்துறை அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகி விட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதில் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி தொலைத் தொடர்புத்துதறை அமைச்சர் பதவியிலிருந்து அ.ராசா விலகியபோது அவர் வகித்து வந்த துறையை திமுகவுக்குத் தரவில்லை காங்கிரஸ். மேலும் அவருக்குப் பதில் வேறு யாரும் அமைச்சராக்கப்படவும் இல்லை. இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறனும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் திமுகவுக்கான காலி இடங்கள் 2 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் ராசாவுக்குப் பதில் வேறு யாரையும் திமுகவிலிருந்து நியமிப்பதில்லை என்ற முடிவில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. காரணம், ராசா வகித்து வந்த தொலைத் தொடர்புத்துறையை தானே எடுத்துக் கொண்டு விட்டது காங்கிரஸ்.

இந்த நிலையில், தற்போது தயாநிதி மாறன் ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் வகித்து வநத் ஜவுளித்துறையை திமுகவைச் சேர்ந்த வேறு ஒருவருக்குக் கொடுப்பதில் சிக்கல் இல்லை என்பதால் விரைவில் இந்த இடத்திற்கு திமுகவைச் சேர்ந்த ஒருவர் சேர்க்கப்படக் கூடும் என்று தெரிகிறது. மேலும் அது அனேகமாக டி.ஆர்.பாலுவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக