புதன், 27 ஜூலை, 2011

பஜரோவை வைத்தியசாலைக்கு தியாகம் செய்த அரச அதிபர் Imelda Sukumar

யாழ் அரச அதிபர் தனது சொந்தப் பாவனையில் இருந்து பஜரோ வாகனத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு வைத்தியர்களின் பாவனைக்கு என கொடுத்துள்ளார். வெளிநாடுகளுக்கு செல்லாது குடாநாட்டில் இருந்து சிறப்பாக சேவையாற்றும்

த்தியர்களின் அளப்பரிய சேவையைக் கருத்தில் எடுத்து இந்த வாகனத்தை தான் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது வாகனத்தை கொடுத்ததாக தெரிவித்த அரச அதிபர் வெளிநாடு செல்லும் வசதி இருந்தும் கூட அங்கு செல்லாது  யாழ் குடாநாட்டு மக்களுக்காக சேவையாற்றும் வைத்தியார்கள் குறிப்பாக வைத்தியகலாநிதி ரவிராஜ், வைத்தியகலாநிதி உமாபதி போன்றவர்கள் இங்கு மன நிறைவுடன் சேவையாற்றி வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தின் முதுகெழும்பாக உள்ள இவ்வாறான வைத்தியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் எனவும் .தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக