வியாழன், 14 ஜூலை, 2011

திருடப் போன இடத்தில் செக்ஸ் அடிமையாகி போலீசுக்கு போய் நிற்கிறார்

இதுவரை அறியாத அனுபவம் திருடனுக்கு ‘பாடம்’ புகட்டிய ரஷ்ய பெண்

மாஸ்கோ : திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. திருடப் போன இடத்தில் இளம்பெண்ணிடம் 3 நாட்கள் செக்ஸ் அடிமையாகி பிரமை பிடித்து போலீசுக்கு போய் நிற்கிறார் அவர். ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி. வயது 32. கடந்த வாரத்தில் காசு இல்லாமல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள ப்யூட்டி பார்லரில் திருட முடிவு செய்தார். உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார்.

அரை மயக்கத்துக்கு போன விக்டர், அதன் பிறகு வேறு மயக்கத்தில் இருந்து மீளாதவராக போலீஸ் நிலையத்தில் இருந்தார். அவரை யாரும் பிடித்துக் கொடுக்காமல், புகார் கொடுக்க தானாகவே போலீஸ் நிலையம் வந்திருந்தார் அவர். அங்கு போலீசிடம் அவர் அளித்த புகார் இதுதான்: பார்லருக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க, கீழே சரிந்தேன். கராத்தே தெரிந்த பார்லரின் உரிமையாளரான இளம்பெண் ஆல்ஜா (28) என்னை வீழ்த்தினார்.

அரை மயக்கத்தில் இருந்த என்னை வேறு அறைக்கு இழுத்து சென்று, 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக அடைத்து வைத்தார். உணவாக ‘வயாகரா’ மாத்திரை மட்டுமே அளித்தார். பிறகு, ரிலீஸ் செய்தபோது ‘இதுதான் உனக்கு சரியான பாடம்’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

& இந்த புகாரை ஏற்ற போலீசார் ஆல்ஜாவை விசாரித்தனர். ‘‘ஆம். திருட வந்தவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். ஓரிரு முறை உறவும் நடந்தது. ரிலீஸ் செய்யும்போது புதிய ஜீன்ஸ், நல்ல உணவு, 1,000 கரன்சி நோட்டுகளும் கொடுத்து அனுப்பினேன்’’ என்றார். என்ன செய்வதென்று தெரியாமல் முதலில் கையை பிசைந்த போலீசார், பிறகு திருட்டு முயற்சி குற்றத்தில் விக்டரையும், பாலியல் அத்துமீறல் புகாரில் ஆல்ஜாவையும் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக