புதன், 27 ஜூலை, 2011

நிர்வாணமாக நடிக்க தயார் - ‘வெடி’க்கிறார் விஷால்

ஹீரோவாக இருந்த என்னை பாலாவின் அவன் இவன் படம் ஒரு நடிகனாக என்னை மாற்றியிருக்கிறது என்று சொன்னார் விஷால். விஷால் படங்களில் டைட்டிலில் புரட்சி தளபதி என்று அடைமொழி இருக்கும். ஆனால் அது அவன் இவன் படத்தில் இல்லை. அது பற்றி கேட்டபோது, இது பாலாவின் படமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைபட்டோம் என்றார்.

அவன் இவன் படம் தன்னை இன்னொரு தளத்துக்கு தூக்கிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் விஷால். படப்பிடிப்பில் பட்ட கஷ்டங்கள் குவியும் பாராட்டுகளால் பறந்தோடி போனதாம்.
இதுவரை உலகில் எந்த நடிகரும் மாறுகண் வைத்து நடிக்காததால், தனது மாறுகண் கெட்டப்பை கின்னசுக்கு அனுப்புகிறாராம். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இனி அந்த மாதிரி கஷ்டத்தை என்னால் அனுபவிக்க முடியாது என்றார்.  இயக்குனர் பாலா மீதான நம்பிக்கையில் அவர் நிர்வாணமாக நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன் என அதிரடி அறிவிப்பும் செய்துள்ளார்.<
விஷால் அடுத்து நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார், சமீரா நாயகியாக நடிக்கிறார். முதல் முறையாக என் உயரத்திற்கு ஏற்ற கதாநாயகியா சமீரா இருக்காங்க என்று சொஞ்சம் அசடு வழிகிறார் விஷால். அந்த படத்தின் பெயர் வெடி.இனி விஷாலுக்கு சர‘வெடி’ தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக