வியாழன், 7 ஜூலை, 2011

ஆஸ்பெஸ்டாசுக்கு தடை மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லியில், நச்சுபொருள் கண்காணிப்பு மையம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கோபால் கிருஷ்ணா, தேசிய மனித உரிமை கமிஷனில் ஒரு புகார் அளித்தார். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் அமைக்க பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கல்நார் கூரைகளால் மக்களுக்கு புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஆஸ்பெஸ்டாஸ் காரணமாக ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்று மனுவில் அவர் கூறியிருந்தார். தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் ஆஸ்பெஸ்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.இதை விசாரித்த மனித உரிமை கமிஷன் ஆஸ்பெஸ்டாசை தடை செய்வது குறித்து மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், தொழிலாளர் நலம், தொழில் வர்த்தக துறை அமைச்சகங்களுக்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக