வெள்ளி, 15 ஜூலை, 2011

எனது தம்பிகளுக்கும் நீ உடன்பட வேண்டும் என்று கூறினார் எனது கணவர்.சித்திரவதைக்குள்ளான இரு பெண்கள் போராட்டம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்களது கணவர்களின் தம்பிகள் கொடுத்த செக்ஸ் தொல்லையைப் பொறுக்க முடியாத இரு பெண்கள் இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கடையை அடுத்த மணியாரங்குன்று பகுதியை சேர்ந்தவர் ராஜையன். இவரது மூ்த்த மகன் பெயர் தாஸ். இவருக்கும், 27 வயதான இந்து என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடந்தது. ஆனால் 6 மாதத்திலேயே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் தனது சீர்வரிசைப் பொருட்களை கணவர் வீட்டாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இந்து. இது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தாஸின் தம்பி சேகருக்கு, சுஜி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. 20 நாள் கூட ஆகாத நிலையில் கணவரை விட்டுப் பிரிந்தார் சுஜி.

இந்த நிலையில் இந்தஇருவரும் சேர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் தங்களது கணவர் வீட்டார் மீது பரபரப்பு செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். நேற்று மாலை இந்துவும், சுஜியும் புதுக்கடை மணியாரங்குன்றுக்கு சென்று தங்கள் கணவன்மார்களின் வீடு முன்பு திடீர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரு பெண்களின் உறவினர்களும் கலந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் குறித்து இந்து கூறுகையில்,

எனது கணவருக்கு 3 தம்பிகள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நல்லபடியாக குடும்பம் நடத்த வேண்டும் என்று கல்யாணத்திற்குப் பின்னர் கூறினார்.நானும் கூட்டுக் குடித்தனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறாரோ என்று நினைத்தேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது, தன்னைப் போலவே தனது தம்பிகளுடனும் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் என்று. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

எனது கணவரின் தம்பிகளும் என்னை அண்ணியாக நினைக்காமல் தவறாக நடக்க முயன்றனர். இதுகுறித்து கணவரிடம் கூறியபோது அதில் என்ன தவறு உள்ளது என்றார். இருந்தால் இரு, இல்லாவிட்டால் போய் விடு என்று மிரட்டினார். அவரது தம்பிகளும், அவர்களின் தங்கை பிரியாவும் சேர்ந்து என்னை அடிக்கவும் செய்தனர்.

இதையடுத்து எனது பெற்றோரிடம் முறையிட்டேன். அவர்கள் பெரியவர்களுடன் வந்து சமரசம் செய்து வைத்தனர். ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே எனது கணவரின் 3வது தம்பி என்னை பலவந்தப்படுத்த முயற்சித்தார். ஆடைகளை கிழித்தார். இதனால் கத்தி சத்தம் போட்டேன். அக்கம் பக்கத்தினர் கூடியதால் ஓடி விட்டார்.

இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்டஎஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அதற்கும் பலன் இல்லை என்றார்.

சுஜி கூறுகையில், முதலிரவின்போது எனது தம்பிகளுக்கும் நீ உடன்பட வேண்டும் என்று கூறினார் எனது கணவர். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். மறு நாள் அவரது தம்பி விஜி என்னிடம் அசிங்கமாகப் பேசினார். வெளியில் நின்றால் யாருக்காக காத்திருக்கிறாய் என்பார். கேவலமாக பேசினார். எனது கணவரும் அவருடன் இணைந்து என்னை அசிங்கமாகப் பேசினார். இதனால்தான் நான் பிரிந்து வந்து விட்டேன்.

எங்களது சீர்வரிசைப் பொருட்களை அவர்கள் தர வேண்டும்.அது வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றார். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக