செவ்வாய், 26 ஜூலை, 2011

வடக்கில் யார் வெற்றிபெற்றிருந்தாலும் ஜனநாயகம் பாரிய வெற்றியடைந்துள்ளது : அமைச்சர் டிலான் பெரேரா

 வடக்குத் தேர்தல் முடிவுகளானது முக்கியமான சில செய்திகளை விடுத்துள்ளது. அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை விடுத்து ஆளும் கட்சியுடனேயே பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று கூட்டமைப்புக்கு ஒரு செய்தியையும் அபிவிருத்தி மட்டுமின்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான அரசியல் தீர்வை விரைவாக முன்வைக்க வேண்டும் என்ற செய்தியை அரசாங்கத்துக்கும் வடக்கு மக்கள் விடுத்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். நான் வல்வெட்டித்துளை உள்ளுராட்சி மன்றத்துக்கு ஆளும் கட்சி சார்பில் பொறுப்பாக செயற்பட்டேன். 1000 வாக்குகள் வல்வெட்டித்துறையில் ஆளும் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 679 வாக்குகளே கிடைத்தன. எனினும் வடக்கு மக்ககளின் தீர்ப்பை நாங்கள் ஏற்கின்றோம். எது எவ்வாறெனினும் வடக்கில் ஜனநாயகம் பாரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக