வெள்ளி, 29 ஜூலை, 2011

யாழில் மக்களை மிரட்டும் மினிவான்கள்,தம்பி மிச்சக்காசைத் தா"


பஸ் பிரயாணம் என்பது இன்று அனைவருக்கும் தொல்லைப் பிரயாணமாகிவிட்டது. பொதுவாக பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பெண்களின் பாடு எப்பொழுதுமே பெரும் திண்டாட்டம்தான். அதுவும் மினிவான்களில் பயணம் செய்வதென்றால் சொல்லவே தேவையில்லை.
அன்று சனிக்கிழமை. மறுநாள் எனது அண்ணாவின் திருமணமாகையால் சனிக்கிழமையே நான் செல்ல ஆயத்தமானேன். மாலை 5 மணியிருக்கும். சாவகச்சேரியில் வைத்து ஒரு தனியார் மினிவானில் நானும் அக்காவும் ஏறினோம். தப்பித் தவறி அந்த மினிவானுக்;குள் ஒரு ஈ எதேச்சையாக மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். உயிர் போய்விடும். அவ்வளவு நெருக்கம்.

சாதாரணமான சனக்கூட்டம் இருந்தாலே பெண்கள் பாடு திண்டாட்டம்தான். அதிலும் நெரிசல் என்றால் கேட்கவா வேண்டும். விசயம் என்னவென்றால் 3 இளசுகள் அந்த மினிவானுக்குள் ஏறி இறங்கும் அத்தனைப் பெண்களையும் பார்த்து நக்கல் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ அவர்களது தாத்தா வீட்டு வான்; போல. நாக்கைப் பிடிங்கிக்கொண்டு நாலு வார்த்தை கேட்கவேண்டும் என்று வார்த்தைகள் தொண்டை வரை வந்தன. வானுக்குள்; உள்ள பெரிசுகளும் சரி நடத்துனரும் சரி.
தாம் உண்டு தம் வேலையுண்டு என்று இருக்கும்போது என்னால் என்ன செய்ய முடியும். என் அக்கா வேறு என் கையை சுரண்டி வாயை வைத்துக்கொண்டு இருடி என்றாள்.

அங்கும் ஒரு தனியார் வான் வரவே ஏறி இருக்கை கிடைக்கவே அமர்ந்துகொண்டோம். ஒரு வயது போன அம்மா 'தங்கச்சி நிக்க ஏலாம இருக்கு. எனக்கும் கொஞ்சம் இடம் தா என்று கேட்க நானும் கொடுத்துவிட்டு எழுந்து நின்றேன்.

பின் கைக்குழந்தையுடன் ஒரு தாய் ஏற நடத்துனர் யாரையாவது சீற் கொடுக்கும்படி கத்தினார். வேண்டா வெறுப்பாக ஒரு இளம் பெண் முறைத்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். நடத்துனரோ காசு வாங்குவதற்கு சனத்தைப் படுத்திய பாடு இருக்கின்றதே ஆடு மாடுகளை விரட்டுவதைப் போல சனத்தை கூச்சலிட்டு விரட்டிக்கொண்டிருந்தார்.

அதற்கு கொழும்பில் உள்ள நடத்துனர்கள் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது. தனியார் மினிவான்காரர்கள் இன்னொரு அநியாயம் செய்கிறார்கள். வானினுள் இரண்டு அல்லது நான்கு சீற்களை கழற்றி எடுத்து விடுகிறார்கள். அப்படி கழற்றப்பட்ட சீற் இடைவெளிகளில் குறைந்தது பத்துப் பேரையாவது எப்படியும் அடைத்து ஏற்றிவிடுவார்கள். எப்படி பிஸ்னஸ் டெக்னிக்.
எங்கே சனங்கள் பொங்கியெழுந்து விடுவார்களோ என்பதற்காக புதிய திரைஇசைப் பாடல்களையும். காமரசம் கொட்டும் பாடல்களையும் ஊச்சஸ்தாயியில் போட்டு விடுவார்கள். பிறகென்ன இளசுகளுக்கு வலு கொண்டாட்டம் தான்.
இடையில் ஒரு வயது முதிர்ந்த தாய் மினிவானை நிறுத்துவதற்கு சைகை காட்டினார். கையில் ஒரு சிறிய கட்டு வைத்திருந்தார். மினிவானும் நிறுத்தப்பட்டது. 'அது என்ன" என்று நடத்துனர் கேட்டார். அந்த அம்மா 'கருவாடு" என்று கூறிக்கொண்டே கட்டை உள்ளே வைத்தார். 'கருவாடா? நாறும் இறங்கு இறங்கு" என்று அந்த அம்மாவை தள்ளிவிட்டு கருவாட்டு கட்டையும் தூக்கி கீழே வீசினார் எனக்கு அந்த நடத்துனரை பளார் பளார் என்று நாலு அறை அறையவேண்டும் போல் கிடந்தது.
இப்படியாக நடந்துகொள்வது. சுயநலமான நடத்துனரின் செயற்பாடுகளை நினைத்து வெட்கித் தலைகுனிந்தேன். வானின் பின்பக்க டிக்கியில் கருவாட்டை ஏற்றியிருக்கலாம் தானே. அல்லது மேலேயுள்ள கரியரில் அதைக் கட்டலாம்தானே. பாவம் அந்த வயதான கிழவி அடுத்த பஸ்ஸ_க்காக எவ்வளவு நேரம் காத்திருந்தாரோ தெரியவில்லை.
ஒருவாறு ஆவரங்கால் வந்தடைந்த பின்னர் எனக்குரிய காசைக் கொடுத்துவிட்டு இறங்க எத்தனித்தபோது என்னிடம் சீற் கேட்டு அமர்ந்த அந்த அம்மாவும் இறங்குவதற்கு ஆயத்தமாகி நடத்துனரிடம் 'தம்பி மிச்சக்காசைத் தா" என்று பணிவோடு கேட்டார். அதற்கு அந்த நடத்துனர் 'இவ்வளவு நேரமும் சீற்றிலதானே இருந்தனீ அதுக்குத்தான் மிச்சக்காசு.." என்று சிறிதும் மனிதாபிமானமற்று கூறினார். அந்த அம்மாவும் பாவம் பேசாமல் இறங்கிவிட்டார்.
எங்கேயாவது இருக்கைக்கும் சேர்த்து காசு வாங்கிய சங்கதி உண்டா? இறங்கிய அவரிடம் நான் 'என்னம்மா நீங்கள் காசு வாங்காமலே பேசாமல் வந்துவிட்டீர்களே" என்றேன்.
'என்ன பிள்ளை செய்வது எல்லோரும் இப்படித்தான் கொஞ்சம் பேசினால் கூட சண்டைக்கு வருவாங்கள் அதுதான் பேசாமல் வாரன். இப்படிக் கொள்ளை அடிச்சு என்ன செய்யப் போறாங்களோ தெரியயேல" என வேதனையுடன் சென்றுவிட்டார்.
எமது சனத்துக்கு நாங்களே இப்படி அக்கிரமம் அநியாயம் செய்தால் மற்றவர்கள்? உண்மையில் யாழ்ப்பாணம் நல்லாத்தான் மாறிப் போய்க் கிடக்கு. பஸ்ஸில் கருவாட்டைக் கொண்டு சென்றால் நாறுமாம். இங்கு கருவாட்டைவிட மோசமாகவல்லவா மனித மனங்கள் நாறிப்போய்க் கிடக்கின்றன? யாழ்ப்பாணம் எப்பொழுது திருந்தும்?
இம்முறைகேடுகள் தொடர்பாக யாழ் மாவட்ட மினி வான் சங்கச் செயலாளர் மயில்வாகனம் நில்சன் அவர்களிடம் கேட்டபோது
'ஓடுவதற்கு சரியான பஸ் இருக்கு. ஆனால் நேரமில்லை. அரச பஸ்கள் நிறைய ஓடுவதனால் எல்லா மினி வான்களையும் ஓட விட முடியல. சனங்கள் அள்ளி அடைவது சில டைமில மட்டும்தான். அதுவும் பின்னேரங்களில் 4 மணி 5 மணி அப்படித்தான் அந்த நிலைமை. நிறய பஸ்கள் வந்திருக்கு. சீற்றுகள் கழற்றுவது பற்றி முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எல்லா சீற்றையும் பூட்டித்தான் ஓடவேண்டும் என்று நாங்கள் மினிவான் நடத்துனர்களுக்கு அறிவித்திருக்கின்றோம்.
நடுவலில் உள்ள பேபி சீற் மட்டும் கழற்றலாம். மற்றவை ஒன்றும் கழற்றக்கூடாது என்று அறிவித்திருக்கின்றோம். மிச்சக்காசுகளை பயணிகளிடம் கொடுக்கச் சொல்லி எல்லா நடத்துனர், சாரதிகளிடமும் சொல்லியிருக்கிறம். அப்படிக் குடுக்காட்டி அதுக்குப் பிரயாணிகள் எங்களிடம் அறிவித்தால் நாங்கள் அதுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பம். இவர்கள் தங்களுடைய பெயரையும் போட்டு வான் இலக்கத்தையும் தந்தால் நாங்கள் அதற்குறிய முறைப்பாட்டைச் செய்வோம்" என்றா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக