புதன், 13 ஜூலை, 2011

கேரள அரசு: பத்மநாபசாமி கோவிலில் கிடைத்த நகைக் குவியல்கள் அனைத்தும் கோவில் சொத்தாகும்

பத்மநாபசாமி கோவிலில் கிடைத்த நகைக் குவியல்கள் அனைத்தும் கோவில் சொத்தாகும். அதை புதையலாக கருத முடியாது என கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேவசம்போர்டு மந்திரி சிவகுமார் சட்டசபையில் கூறுகையில், பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைக் குவியலை புதையல் என்றே சில தரப்பினர் வாதிடுகின்றனர்.

கேரள புதையல் சட்டத்தின் கீழ் அதை கேரள அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். திரும்பத் திரும்ப `புதையல்' என்றே அதை கூறுவது தவறு. அந்த நகைகள் அனைத்துமே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்கள் ஆகும். கோவிலுக்கு முழுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக