வியாழன், 28 ஜூலை, 2011

எடியூரப்பா பதவி விலக பாஜக அதிரடி உத்தரவு!சட்ட சபை கலைப்பு?

முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா பதவி விலக பாஜக அதிரடி உத்தரவு!
புதுடெல்லி : கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை பதவி விலக பாஜக உத்தரவிட்டுள்ளது. நிதின் கட்காரி தலைமையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுரங்க ஊழலில் சிக்கியதால் எடியூரப்பாவை பதவி விலக பாஜக வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து எடியூரப்பாவிற்கு பதில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய ஜேட்லி மற்றும் ராஜ்நாத் நாளை பெங்களூர் வருகின்றனர்.

பதவி விலகலாமா? அல்லது சட்டசபையை கலைக்கலாமா?

பெங்களூரில் பாஜக அமைச்சர்ள் மற்றும் எம்எல்ஏ., க்களுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பதவி விலகலாமா? அல்லது சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்யலாமா என்பது குறித்து பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எஏ., க்களின் கருத்தை கேட்டு வருகிறார் எடியூரப்பா. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ க்கள் கலந்து கொள்ள கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கட்சி மேலிட உத்தரவை மீறி எடியூரப்பா ஆலோசகைவ் கூட்டத்தில் எம்எல்ஏ க்கள் கலந்து கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்த முதல்வர் யார்?

எடியூரப்பாவிற்கு பதில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய ஜேட்லி மற்றும் ராஜ்நாத் நாளை பெங்களூர் வருகின்றனர். அடுத்த முதல்வராக தேர்வு செய்ய ஐந்து பேரின் பெயரை பரிந்துரை செய்துள்ளது பாஜக மேலிடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக