வெள்ளி, 15 ஜூலை, 2011

Japan closing nuclear அணு மின்சாரம் கைவிட ஜப்பான் முடிவு

ஜப்பானில் புகுஷிமா அணுஉலைக்கூடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிரியக்க கசிவு ஏற்பட்டது. விபத்து 4 ஆண்டுகளான பிறகும், கதிரியக்க கசிவு நின்றபாடில்லை. இதனால் சுவாசிக்கும் காற்றிலும் தண்ணீரிலும் கூட கதிரியக்கம் கலந்து உள்ளது.

இதனால் அணுமின் நிலையங்களை மூடுவது என்ற முடிவுக்கு ஜப்பான் பிரதமர் கான் வந்து விட்டார். இதை அவர் புகுஷிமா அணுஉலைக்கூடத்துக்கு சென்றபோது தெரிவித்தார்.

அணுமின் உற்பத்தியை ஜப்பான் கைவிடுவது என்று தீர்மானித்து உள்ளது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அணுஉலைக்கூடங்களே இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பானில் மொத்தம் உள்ள 54 அணுஉலைக்கூடங்களில் 35 கூடங்கள் மூடப்பட்டு விட்டன. மீதி நிலையங்களையும் மூடி விட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார். அணுசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது அதில் நிறைய அபாயம் உள்ளது.

அதை பாரம்பரிய பாதுகாப்பு முறைகளை கொண்டு தடுக்க முடியாது. அதனால் நாம் அணுமின்சக்தியை நம்பி இருக்காத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அணுமின்சக்தி இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு கால கெடு எதுவும் விதிக்க முடியாது.என்றும் அதை படிப்படியாக தான் கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக