செவ்வாய், 12 ஜூலை, 2011

அமைச்சர் டக்ளஸ் துவிச்சக்கர வண்டியில் பிரசாரம்

சாவகச்சேரியில் அமைச்சர் டக்ளஸ் துவிச்சக்கர வண்டியில் பிரசாரம்

சாவகச்சேரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துவிச்சக்கர வண்டியில் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இச்சூறாவளி பிரசாரத்தில் மக்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

முக்கியமாக அப்பகுதியில் மக்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ள குடிநீர்ப் பிரச்சினை வீடு திருத்தம், மின்சாரம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்ததுடன் ஆங்காங்கே மக்களைச் சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதில் மக்கள் அளவிலா மகிழ்ச்சியடைந்தனர்.

இதில் ஈ,பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சார்ளஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. வேட்பாளர்களும் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக