புதன், 27 ஜூலை, 2011

அதிமுக,தி.மு.க அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தான மைனர் பெண்,ராமநாதபுரம்

ராமநாதபுரம் : மைனர் பெண்ணை திருச்சி, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகள் ஜூலி(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 14வயதில் திருமணம் நடந்தது. திருமணமான 17வது நாளில் கணவரை பிரிந்தார். அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

அங்கு வேலை செய்த பூங்கோதையுடன் ஜூலிக்கு பழக்கம் ஏற்பட்டது. பணம் தருவதாக கூறி ஜூலியை பூங்கோதையின் தாயார் விபசார தொழிலில் ஈடுபடுத்த தொடங்கினார். இந்நிலையில் விபசார கும்பலிடமிருந்து தப்பித்த ஜூலி, ராமநாதபுரம் பிவிஎம் அறக்கட்டளையிடம் தஞ்சமடைந்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஜூலியை, ராமநாதபுரம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரிடம் ஜூலி கூறுகையில், திருமங்கலத்தை சேர்ந்த பூங்கோதையுடன் ஜவுளிக்கடையில் வேலை செய்தேன். பூங்கோதையின் தாயார் என்னை விபசாரத்தில் ஈடுபடுத்தினார். பின்னர் அவர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சதீஷ், அவரது மனைவி செல்வியிடம் ஸீ5 ஆயிரத்துக்கு விற்றார். அவர்களிடம் இருந்து மதுரையை சேர்ந்த சத்யா, சந்திரா, கலைச்செல்வி ஆகியோரிடம் கை மாறினேன்.

காரைக்குடியை சேர்ந்த ருக்மணி என்பவர் மூலம் மதுரை, திருச்சி, சென்னை, திண்டிவனம், ராமேஸ் வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டேன். மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பாண்டி, ராஜேந்திரன் மற்றும் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்ÕÕ என்றார்.

இதையடுத்து, பூங்கோதையின் தாயார், செல்வி, மதுரை சத்யா, சந்திரா, கலைச்செல்வி, காரைக்குடி ருக்மணி ஆகியோர் மீது ராமநாதபுரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சீனிக்கட்டி மகன் ஷேக், ஆனந்தம், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் ஜலீல், இளங்

மிட்டாயில் பசியாறிய கொடுமை
*ஒரு வாரத்திற்கு ஒரு ஊராக சிறுமி ஈஸ்வரி, 5,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விலை பேசி, கைமாற்றப்பட்டுள்ளார். இவரை விலைக்கு வாங்கும் புரோக்கர்கள், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்து செல்லும் போது, சாப்பாடு கூட வாங்கித் தருவதில்லை. 10 ரூபாய்க்கு தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்தே, பசியாற வைத்தனர்.
*"புது வரவு' எனக் கூறியே, வாடிக்கையாளர்களுக்கு இரண்டரை ஆண்டுகளாக ஓய்வில்லாமல் விருந்தாக்கப்பட்டார்.
*விபசார கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமியிடம், ஒரு பைசா கூட இல்லை. கிழிந்த உடையுடன் இருந்தவருக்கு, தொண்டு நிறுவனத்தினர் புதிய உடை வாங்கி கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக