ஞாயிறு, 10 ஜூலை, 2011

பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!

பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!மச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில் எந்த கல்வியாளர்களும் இல்லை மாறாக தனியார் பள்ளி முதலாளிகள் மற்றும் நிர்வாகிகள்தான் உள்ளனர்.
அந்தக்குழுவோ சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை கல்வியியல் ரீதியாக ஆய்வு செய்யாமல் அதை முடக்குவதே குறிக்கோளாக கொண்டு சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை தரமற்றது என உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்தாமல் மீண்டும்  பழைய பாடத்திட்டங்களை  கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!இதனால் ஏழை மாணவர்களிடமிருந்து தரமான பள்ளிக்கல்வி பறிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை உடனே அமுல் படுத்தக்கோரியும்,  அதை நிறுத்திவைப்பதற்காக தமிழக அரசால் வெளியிடப்பட்ட  கல்விக்கொள்ளைக்கான அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் உயர் நீதிமன்றம் முன்பு 08.07.2011 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைச் செயலாளர் தோழர் வ. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் வழக்குரைஞர்களும், ம.க.இ.க தோழர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நகல் எரிப்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் கார்த்திகேயன் மற்றும் ஐந்து தோழர்கள் ம்ட்டும் வழக்கு தொடரப்பட்டு புழல் சிறையில் அடைக்க்கப்பட்டனர்.
பாசிச ஜெயா வெளியிட்ட அறிக்கையை எரித்து நடந்த போராட்டம் ‘அம்மா’ காதுக்குப் போனால் பிரச்சினை என்ற அடிமைத்தனத்துடன் போலீசு ஆறு தோழர்களை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. ஆயினும் பு.மா.இ.மு, ம.க.இ.க தோழர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகின்றனர். இந்த சிறை நடவடிக்கை அவர்களை முடக்கிவிடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக