வியாழன், 21 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி.வீரமணி: கவுரப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்!

கல்வியாளர்களின் வேண்டுகோள் தமிழக அரசுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது: கி.வீரமணி
உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, பிள்ளைகளின் - பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாழாக்காமல், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் விடுத்த வேண்டுகோள் தமிழக அரசுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது.
மீறிச் சென்று தடை ஆணை கோரியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக அரசு காலதாமதம் இனியும் செய்யாமல், பள்ளிக்கூடங்களை, பாடங்கள் நடத்தும் கூடங்களாகச் செய்து, உடனடியாக ஏற்கெனவே அச்சிடப்பட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கவலையைப் போக்கிப் பொறுப்புணர்ச்சியோடு தமிழக அரசு கடமையாற்ற முன்வரவேண்டும். இனிமேலும் இதை கவுரப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்! நியாயம் கிட்டியுள்ளது.
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக