ஞாயிறு, 10 ஜூலை, 2011

இந்திய பயணிகள் கொழும்புக்கு காருடன் பயணம் செய்யும் வசதி

இந்திய பயணிகள் கொழும்புவுக்கு தங்களது சொந்த காரை கப்பலில் எடுத்துச் செல்லும் வசதியை ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பல் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

பிலிம்மிங்கே லினர்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் விடப்பட்டுள்ளது.

கொழும்புக்குச் செல்லும் பயணிகள் தங்களது சொந்த வாகனத்தை இந்தக் கப்பலில் பதிவு செய்யப்பட்ட லக்கேஜ் போல் எடுத்துச் சென்று அங்கு காரில் பயணம் செய்யலாம்.

டிரைவ் இன் டிரைவ் அவுட் என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு காரை எடுத்துச் செல்லும் பயணி 6 மாதத்திற்குள் திரும்பி வர வேண்டும். வங்கி உத்தரவாதம் தர வேண்டும். ஆட்டோமொபைல் அசோசியேஷனில் உறுப்பினராக வேண்டும். இலங்கையில் தற்காலிகமாக வாகனத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதுபோன்ற சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவல்கள் பிலிமிங்கோ லினர்ஸ்சின் செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக