வெள்ளி, 22 ஜூலை, 2011

யாழில் முதியவருக்கு மது வழங்கி பின் அடித்து கொலை

யாழ் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு பின்புற வீதியில் உள்ள பாலடைந்த கட்டம் ஒன்றிலிருந்து வயது முதிந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவருக்கு மது வழங்கி பின் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குருநகரைச் சேர்ந்த 68 வயதான எஸ்.ஜேசுதாஸன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைகளில் இவர் இரு தங்க மோதிரம் அணிந்திருந்ததாகவும் அதனைத்திருடுவதற்காக இவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருப்பதாகவும், இவர் செல்வந்தர் எனவும் உறவினர் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை யாழ் மாவட்ட நீதவான் ஆனந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக