வியாழன், 21 ஜூலை, 2011

திமுக வழக்கு:புதிய தலைமைச் செயலகம் முறைகேடு விவகாரம்

கடந்த திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்  விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து திமுக பொதுச்செயலர் அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பல்வேறு புகார்கள் வந்ததால் அதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக