வெள்ளி, 22 ஜூலை, 2011

பாரிய பிளவை நோக்கி திமுக. அழகிரி ஸ்டாலின் மோதல் வெடிக்கப்போகிறது

மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில் முடிவு?

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வளிக்கும் வகையில், தற்போது பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினை, செயல் தலைவர் பதவியில் அமர்த்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் பெரும் பரபரப்பும் நிலவுகிறது.

திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் தலைமையில் ஒரு கோஷ்டியும், அழகிரி தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இதுபோக கனிமொழி குரூப், தயாநிதி மாறன் குரூப் என குட்டி குட்டி குரூப்களும் உள்ளன.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தி்ல் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாள் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.

ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.

இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.
தலைமைக்கு இணையான தென்மண்டல குழுவின் தலைவராக அழகிரி இருப்பதால் அதை கலைத்து விட வேண்டும் என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பதொடங்கியுள்ளனர்.
கோவையில் கூடப்போகும் பொதுக்குழுவுக்கு சமுகம் அளிக்க மாட்டோம் என்று அழகிரி தரப்பில் பதிலடி கொடுக்கப்படுகிறது.

இதுபோக கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
மோதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக