புதன், 20 ஜூலை, 2011

தங்க சிம்மாசனம் எங்கே?வெளிநாட்டு பக்தர் வழங்கியிருந்த பிரமாண்டமான தங்க சிம்மாசன

புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலைய வளாகத்தில் சத்ய சாய்பாபா தங்கியிருந்த அறையில் இருந்து பல கோடி ரூபாய் கரன்சிகள், 35 கிலோ தங்க நகைகள், சுமார் ஆயிரம் கிலோ அளவுக்கு வெள்ளி சிலைகள் கிடைத்துள்ளன. இந்த அறைகளுக்குள் பாதாள அறைகள் அமைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தீவிர சோதனை நடந்து வருகிறது.
பிரசாந்தி நிலைய வளாகத்தில் நேற்று 2-வது நாளாக சோதனை நடந்தது. கடந்த பல ஆண்டுகளில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த சிவன், மகாவிஷ்ணு, ராமர், கிருஷ்ணர், வேணுகோபாலர் சுவாமிகளின் வெள்ளி சிலைகள், சிம்மாசனங்கள், நாகபடுகைகள், குடைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவை குவிந்திருந்தன. வெளிநாட்டு பெண் பக்தர் ஒருவர் கடந்த ஆண்டில் பிரமாண்டமான தங்க சிம்மாசனத்தை பாபாவுக்கு காணிக்கையாக வழங்கியிருந்தார். சோதனையில் அது மட்டும் கிடைக்கவில்லை. பல கோடி மதிப்புள்ள அந்த சிம்மாசனம் எங்கே போனது என்பது மர்மமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக