யாழ்ப்பாணம் சென்றுள்ள ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தகவல் தருகையில்:
இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்புப் பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளன. இந்த விமான நிலையத்துக்கு வரும் பொது மக்களின் நன்மை கருதி காங்கேசன்துறை - பருத்தித்துறை மற்றும் பலாலி ஆகிய பிரதேசங்களில் உள்ள வீதிகள் புனரமைக்கப்பட்டு காபட் வீதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
அதேபோன்று ஏ-9 வீதியும் நான்கு பிரிவுகளைக் கொண்டதாக மாற்றப்பட்டு வருகின்றது. புனரமைப்பு நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ள பலாலி - அச்சுவேலி மற்றும் தொண்டமானாறு வீதிகள் இந்த வார இறுதியில் திறந்து வைக்கடவுள்ளன.
இதன் காரணமாக இப்பிரதேச மாணவர்களும் பொது மக்களும் பெரும் நன்மையடைவார்கள் என்றும் கட்டளைத் தளபதி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக