ஒரேநாடு ஒரே மக்கள்
வடக்கு தெற்கில் மீண்டுமொரு இனப்பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம், தெற்கில் சிங்கள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில மொழிகளிலும் கல்வி கற்கக் கூடிய வசதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இவ் விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ் பாலிகா வித்தியாலய மாணவி மயுஷா தர்ம குலசிங்கம் நானும் எனது சகோதர மாணவிகளும் முதன் முறையாகவே அநுராதபுரத்திற்கு வருகை தந்துள்ளோம். சிங்கள மாணவர்கள், சிங்கள மக்கள் எவ்வளவு கருணையுள்ளவர்கள் என்பதை புரிந்து கொண்டோம்.
மொழிப் பிரச்சினை காரணமாக கருத்து தெரிவிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டோம் தம்மென்னாபுர மஹேஷ் துஷார எமது இராணுவத்தினர் வடக்கில் கொல்லப்படும் போதும் தெற்கில் குண்டு வெடிப்புகள் நிகழும் போதும் யாழ். தமிழ் மக்கள் மீது வெறுப்படைந்தோம்.
ஆனால் உங்களோடு கழித்த இரு நாட்களையும் வாழ்க்கையில் மறக்க முடியாது.
இந் நிகழ்வுகளை ஏனைய பாடசாலைகளும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக