சனி, 23 ஜூலை, 2011

வலுவிழக்கும் சி.பி.ஐ.,யின் வாதம் : மாஜி அமைச்சர் ராஜா கருத்து

புதுடில்லி: "2ஜி வழக்கில் நாளுக்கு நாள், சி.பி.ஐ., தரப்பின் வாதம் வலுவிழந்து கொண்டே போகிறது' என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரணையில் கூறினார். டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதன் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்று நடந்தது. அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித், தனது வாதத்தை வைத்த போது மிக மெல்லிய குரலில் பேசினார். இதையடுத்து, யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் டி.பி.,சிங், சிறிது சத்தமாக வாதாடும் படி, லலித்திடம் கோரிக்கை விடுத்தார். இச்சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராஜா,"இதற்குக் காரணம் சி.பி.ஐ.,யின் வாதம் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டே போவது தான்' என்றார். லலித் வாதாடும் போது இடையில் குறுக்கிட்ட சிங்,"லலித், நீங்கள் நேற்று மிக சத்தமாக வாதாடினீர்கள். இன்று உங்கள் குரல் மிகவும் மெலிதாகி விட்டது' என்றார். ஸ்வான் நிறுவன உரிமையாளர் ஷாகித் பல்வா சார்பில், ஆஜரான வழக்கறிஞரான மஜித் மேமன், வாதாடும் போது தெளிவாகக் கேட்பதற்கு வசதியாக மைக்ரோபோன்களை அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-07-23 03:06:24 IST Report Abuse
கோர்ட்டில் இப்போ குசு குசுன்னு பேசற சி.பி.ஐ அப்புறம் ஊமை ஜாடை காமிக்கும். அப்புறம் ஐயோ சாமி மன்னிச்சுருங்க நாங்க தெரியாம தப்பு பண்நீட்டோம் அப்படின்னு கும்பிடு போட்டு ஒரே ஓட்டம் பிடிக்கும் , இந்த கேசில் சி.பி.ஐ தோத்தால் சி.பி.ஐ யை கலைத்துவிட வேண்டும்
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-07-23 01:04:32 IST Report Abuse
ஆண்டிமுத்து ராசாவே..இப்படியும் ஓர் நப்பாசையோ? சத்தமாய் நீர் பேசினீர்..சென்னை ஏர்போர்டில்..!! என்னாச்சு? அடுத்த நாளே உள்ளே பிடித்து போட்டார்கள் இல்லையா? உமது தலைவர் என்ன சொன்னார்..? தலித் என்பதால் ராசா மீது குற்றம் சுமத்துகின்றனர் என்றார்..! அறிக்கை என்றும்..பேட்டி என்றும்..கேனா பானா அறிக்கை என்றும் காதை பிளக்கும் சப்த்ததோடு பேசினார்..! என்னாச்சு..? கனிமொழிக்கு வாதாடும்போது..அவரது வழக்குரைஞர் என்ன சொன்னார்..? நடைபெற்ற எல்லா ஊழலுக்கும் ராசாவே காரணம் என்றாரே..! மறந்து போனதேன் ? காலமெல்லாம் உமக்கு அந்த திகார் வாசம்தான்...! கற்பனையிலே மிதக்காதே..!! இன்னமும் நான் சொல்வதெல்லாம்..உமக்குள்ள ஒரேவழி..உமது மனைவி சொல்வது போல் "அப்ரூவராய்" மாறுவதை தவிர வேறு வழியே இல்லை..! அதை செய்..! அதைவிடுத்து..சன்னமாய் பேசுவதால் வலுவிழந்துவிட்டது என்று "வானிலை" அறிக்கை போன்று வாசிக்காதே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக