சவுதி அரேபியாவில் மரண தண்டனை பெற்றுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கை காப்பாற்ற தன்னால் முடிந்த முயற்சிகளை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி சவுதி மன்னருக்கு விடுத்திருந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்குக்கூட சவுதி அரேபிய மன்னருக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரிஸானாவை தண்டனையிலிருந்து விடுவிக்க மரணமான குழந்தையின் பெற்றோரினாலேயே முடியுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனால் குறித்த பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசப்படுத்தவென இலங்கையிலிருந்து குழுவொன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக