நூற்றுக்கும் மேற்பட்டோரால் இந்த சிறுமி சிதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறுமியின் வாழ்க்கை இப்படி பாலியல் கொடுமைகளுக்குள்ளாக அவரது தந்தையே காரணம். அவரை கேரள போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு தங்களது 18 வயது மகளை பலருக்கும் உல்லாசமாக இருக்க அனுப்பி அந்தச் சிறுமியை நாசம் செய்துள்ளான் இந்த படுபாவி.
இந்த வழக்கில் முதலில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.
அவர்களைப் பிடிக்க கொச்சி போலீஸார் தனிப் படையை அமைத்துள்ளனர். இவர்கள் கோவை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியை தான் மட்டும் பலத்காரம் செய்ததோடு தன்னோடு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் பலருக்கும் மணிகண்டன்,மாணவியை சப்ளை செய்துள்ளார். சுமார் 100 பேர் வரை மாணவியை பலத்காரம் செய்ததாக கொச்சி குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் தயாரித்தனர்.
இதில் குற்றவாளிகளை உறுதிப்படுத்த கேரள மாநிலம் அலுவா துறை சிறைச்சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது போலீசார் நிறுத்தியிருந்த சுமார் 100 பேரில் 8 பேரை அடையாளம் காட்டினார் சிறுமி.
இதில் மணிகண்டன், சிபிஎம் தலைவரான தாமஸ் வர்கீஸ், உன்னிகிருஷ்ணன், விஜய்குமார், மனோஜ் கோபி, முருகேசன், நோபி, ஸ்வராஜ் ஆகியோர் அடங்குவர்.
இந் நிலையில் இந்த கற்பழிப்பில் தொடர்புடைய பழனியைச் சேர்ந்த முகுதீஸ்வரன் (32), பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்வாமிதாசன் (61), கேரள மாநிலம் பரவூரைச் சேர்ந்த ராஜசேகரன் நாயர் (40), செபின் பிரான்சிஸ் (28), எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணான ஜூலி ஆகியோரை நேற்று கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் நாயர் முன்னாள் கடற்படை அதிகாரியாவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக